சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் விதமாக திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் அவர்கள் தலைமையில் மரக்கன்று நட்ட காவல்துறையினர்
20:11:2020 திண்டுக்கல் சரக காவல்துறை துணைத்தலைவர்
திரு.M.S.முத்துசாமி,இ.கா.ப., அவர்கள் தேனி மாவட்டம் தேவாரம் காவல் நிலையத்தில் ஆய்வுகள் மேற்கொண்டு காவல் நிலையத்திற்கு வரும் புகார் மனுக்கள் மீது துரித விசாரணை நடத்த வேண்டுமென்றும், மக்கள் பாதுகாப்பு பணியின் போது ஒவ்வொரு காவலர்களும் தங்கள் பணியின் போது காவல்துறையினர் பொது மக்களின் நண்பனாக விளங்க வேண்டுமென்றும் தக்க அறிவுரைகள் வழங்கினார்.
மேலும் திண்டுக்கல் சரக காவல்துறை துணைத் தலைவர் அவர்கள் தலைமையில் காவல் நிலையங்களின் சுற்றுப்புறங்களில் மரக்கன்றுகளை நட்டு, சுற்றுச்சூழலை பாதுகாக்க காவல்துறையில் பணிபுரியும் ஒவ்வொருவரும் அதற்கான முயற்சியை எடுக்க வேண்டும் எனவும், காவல்துறையினருக்கு மரக்கன்றுகள் வளர்ப்பதனால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மைகள் குறித்தும், ஆலோசனைகள் வழங்கினார்.
