மதுரையில் பரபரப்பு
இது வரை 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது
மதுரை மாநகரில் கடந்த 11 மாதத்தில் 65 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல் துறை ஆணையர் அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளது மதுரை மாநகர் பகுதியில் இருக்ககூடிய 22 காவல் நிலையங்களுக்கு உள்பட்ட இடங்களில் பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் பொது இடங்களில் தகராறு செய்ததாக சுமார் 714 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பாக 69 பேர் ரவுடிகள் என்றும் கூறப்படுகிறது. மேலும் தொடர்ந்து இது போன்ற சம்பவங்களில் ஈடுபட்ட 65 பேரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் மதுரை மாநகர் காவல் துறை சிறையில் அடைத்துள்ளனர், என தகவல் அளித்துள்ளனர்
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநில செய்தியாளர்