Police Department News

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள 100 கடைகளுக்கு தியணைப்பு துறை நோட்டீஸ்

மதுரை, தெற்கு வாசல் பகுதியில் உள்ள 100 கடைகளுக்கு தியணைப்பு துறை நோட்டீஸ்

தெற்குவாசால் பகுதில் மேலும் 100 கட்டிடங்களுக்கு தியணைப்பு துறையினர் நோட்டீஸ் அளித்துள்ளனர்.

மதுரை, விளக்குதூண் நவபத்கானா தெருவில் தீபாவளியன்று அதிகாலை ஒரு ஜவுளிக் கடையில் ஏற்பட்ட தீயை அணைக்க முயன்றதில், கடையின் மேல் தளம் இடிந்து விழுந்து தீயணைப்பு வீரர்கள் சிவராஜன், கிருஷ்ணமூர்த்தி இறந்தனர். இதையடுத்து நவபத்கானா தெரு விளக்குத்தூண் பகுதியில் உள்ள பல கடைகளில் தீயணைப்பு சாதனங்கள் இருக்கிறதா? அங்குள்ள கட்டிடங்களில் மேல்தளங்கள் மற்றும் பக்கவாட்டு சுவர்கள் எப்படி உள்ளன? விளக்குத்தூண், காமராஜர் சாலை மீனாட்சியம்மன் கோவிலை சுற்றியுள்ள பகுதிகள் நேதாஜி ரோடு, தெற்கு மாரட் வீதி ஆகிய மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் உள்ள பல கடைகளின் தன்மை, தீயணைப்பு கருவிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறதா? என ஆய்வு செய்ய தீயணைப்பு துறை உதவி இயக்குனர் திரு. சரவணக்குமார் அவர்கள் உத்தரவிட்டார்.

இதன் பேரில் மாவட்ட தீயணைப்பு அதிகாரி கல்யாண்குமார் அவர்கள் தலைமையில் நிலைய அலுவலர்கள் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் குறித்து பட்டியல் தயாரித்து 120 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்ட நிலையில் தற்போது மேலும் 100 ககும் மேற்பட்ட கட்டிடங்கள் குடியிருக்க தகுதியற்றவையாக உள்ளதாக கூறப்படுகிறது. அவைகளின் உரிமையாளர்களுக்கு தியணைப்பு துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.