

மதுரை மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையத்தில் ஏற்படுத்தவுள்ள போக்குவரத்து மாற்றங்கள்
மதுரை மேலூர் சாலையில் மாட்டுத்தாவணி பேரூந்து நிலையம் மற்றும் ஆம்னி பேரூந்து நிலையம் நுழைவு வாயில்கள் சுமார் 50 மீட்டர் இடைவெளியில் அருகருகே அமைக்கப்பட்டுள்ள காரணத்தாலும் இந்த நுழைவு வாயிலை அதிக அளவில் பேரூந்துகள் மற்றும் பயணிகள் சாலையை கடக்க பயன்படுத்துவதாலும் பயணிகளுக்கு நெருக்கடி ஏற்படுவதோடு மேலூர் சாலையிலும் மிகுந்த போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது ஆம்னி பேரூந்து நிலையத்தில் போதிய இடவசதியுடன்
1) லேக் ஏரியா சாலை அருகில்
2) 120 அடி சாலை சந்திப்பு
3) மாட்டுத்தாவனி பேரூந்து நிலைய நுழைவு வாயில் (மேலூர் சாலை ஆர்ச்) அருகில் மற்றும்
4) பின்புற நுழைவு வாயில் ஆகிய இடங்களில் 4 நுழைவு வாயில்கள் கட்டமைக்கப்பட்டுள்ளன
இதில் 3 வது வாயில் பாதையில் தார் சாலை அமைக்கப்பட்டு ஆம்னி பேரூந்து அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பயணிகள் அனைவரும் தங்களது வாகனங்களை இவ்வாயிலினை பயன்படுத்தி வந்து செல்கின்றனர் அது போலவே அனைத்து ஆம்னி பேரூந்துகளும் இந்த வாயில் வழியாகவே வந்து செல்வதால் மிக கடுமையான வாகன போக்குவரத்து நெருக்கடி ஏற்படுகிறது. இதன் காரணமாக மேலூர் மெயின் ரோட்டில் பொதுமக்கள் வாகன போக்குவரத்திற்கு மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். மேலூர் சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு மேற்படி 3 வாயில்களில் கீழ் கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செய்ய மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. செந்தில் குமார் அவர்களின் உத்தரவின்படி திட்டமிடப்பட்டுள்ளது.
பின்புற நுழைவாயில்
1) அனைத்து ஆம்னி பேருந்துகளும் பேரூந்து நிலைய சுற்று சுவருக்கும் வண்டியூர் கண்மாய் கால்வாய்க்கும் நடுவில் மீன் மார்கெட்டுக்கு செல்லக்கூடிய பாதை வழியாக சென்று ஆம்னி பேரூந்து நிலைய பின்புற நுழைவு வாயில் வழியாக உள்ளே நுழைய அனுமதிக்கப்படும். இவ்வாகனங்கள் தற்சமயம் நிறுத்தப்பட்டு வரும் மைதானத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி முதலாவது வாயில் வழியாக வெளியே செல்ல வேண்டும்.
முதல் நுழைவு வாயில்
2) இனி வரும் காலங்களில் ஆம்னி பேரூந்துகள் மற்றும் பயணிகாளின் வாகனங்கள் வெளியேறும் வழியாக மட்டுமே Exit Gate பயன்படுத்தப்படும். இவ்வாயில் அனைத்து வாகனங்களும் நுழைய தடை செய்யப்படுகிறது.
இரண்டாவது நுழைவு வாயில்
பயணிகளின் 2 சக்கர 4 சக்கர வாகனங்கள் ஆட்டோக்கள் மற்றும் பிற போகுவரத்து முறைகள் இனி மேல் மேலூர் சாலை 120 அடி சாலை சந்திப்பில் அமைந்துள்ள 2 வாது நுழைவு வாயில் வழியாக உள்ளே சென்று அதற்குன்டான இடத்தில் நிறுத்தம் செய்து பின்பு முதலாவது வாயில் வழியாக வெளியில் செல்ல வேண்டும் இவ்வாயிலில் அனைத்து வகை வாகனங்களும் வெளியேற தடை செய்யப்படுகிறது.
மூன்றாவது நுழைவு வாயில்
ஆம்னி பேரூந்து நிலைய மூன்றாவது நுழைவு வாயிலில் கையடாக்க சாமான்களுடன் நடந்து வரும் பயணிகள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் அந்த சாலையினை இரண்டு சக்கர நான்கு சக்கர வாகனங்கள் ஆட்டோ மற்றும் சைக்கிள் ஆகியவை தடை செய்யப்படுகிறது.
எனவே பொதுமக்கள் வியாபார பெருமக்கள் பேரூந்து உரிமையாளர்கள் ஓட்டுனர்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள் அனைவரும் மேற்கண்ட வாகன போக்குவரத்து மாற்றத்திற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு போக்குவரத்து காவல் துறையின் சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
