மதுரை, தெற்கு வாசல் பகுதியில் ஜவுளிக்கடையில் தீ விபத்து, 9 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது
மதுரை, சின்னச்சொக்கிகுளம், கோகிலே ரோட்டில் வசிக்கும் முகமதுஅலி மகன் C.M.பைசல் அஹமத் வயது 33/2020, அவர்ளுக்கு சொந்தமான ஜாரிப் கிளாத்திங் என்ற பெயரில் ஜவுளிக்கடை ஒன்று மதுரை தெற்கு வாசல் பகுதியில் கடந்த 2014 ம் ஆண்டு முதல் இயங்கி வருகிறது.
வழக்கமாக இவர் கடையை இரவு 9.30 மணிக்கு அடைத்து விட்டு,மீண்டும் மறு நாள் காலை 9.30 மணியளவில் கடையைத் திறப்பது வழக்கம், இந்நிலையில் கடந்த 21 ம் தேதி இரவு வழக்கம் போல் இரவு 9.30 மணிக்கு கடையை அடைத்து விட்டு வீட்டிலிருந்த சமயம் மறுநாள் 22 ம் தேதி காலை சுமார் 4.30 மணியளவில் இவரது நண்பர் ஜிகர் என்பவர் இவருடைய செல்போனுக்கு போன் செய்து இவரது ஜவுளிக்கடை தீப்பற்றி எரிவதாக தகவல் சொல்லியுள்ளார். அதன் பேரில் இவர் கடை ஊழியர்களுக்கு தகவல் சொல்லி விட்டு கடைக்கு வந்து பார்த்த போது, தீயணைப்பு துறையினர் கடையியில் தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை தீயினை அணைத்துக் கொண்டிருந்தனர், மற்றும் காவல் துறையினரும் அங்கு தீ பரவாமல், தடுத்துக் கொண்டிருந்தனர். கடையில் இருந்த தீப்பற்றி எரீந்த பொருட்களின் சேத மதிப்பு சுமார் 9 லட்சம் இருக்கும் எனவும் இது சம்பந்தமாக தீயணைப்பு துறையினரிடமும், தனது ஆடிட்டரிடமும் தகவல் சொல்லி விட்டு 22 ம் தேதி பகல் 1 மணியளவில் தெற்கு வாசல் காவல் நிலையம் வந்து தீப்பிடித்த விபரம் பற்றி விசாரணை நடத்தும்படி புகார் கொடுத்தார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விரைந்து செயல் பட்டனர், காவல் ஆய்வாளர் திருமதி. அனுராதா அவர்களின் உத்தரவின்படி, சார்பு ஆய்வாளர் திரு. முருகன் அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி,மாநில செய்தியாளர்
