குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு சார்பாக குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் தடுப்பது குறித்த விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது
24.11.2020 திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே உள்ள குரும்பபட்டியில் சர்வதேச குழந்தைகள் தினம் மற்றும் குழந்தை பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிரான தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு படம் மற்றும் பாடல் வெளியீட்டு விழா நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் சரக காவல்துறை துணை தலைவர் திரு.எம்.எஸ்.முத்துசாமி இ.கா.ப. அவர்கள் கலந்துகொண்டு குழந்தை திருமணம் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக நடக்கும் குற்றங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளை கூறினார்கள். மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பொதுமக்கள் முன்வந்து காவல் நிலையங்களில் புகார் கொடுக்கும் படியும், அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக் கொடுக்கும் படியும் அறிவுரை கூறினார்கள்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திண்டுக்கல் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.இனிகோ திவ்யன் அவர்களும் ஊரக உட்கோட்ட காவல் துணைக் கண்காணிப்பாளர் திரு.வினோத் அவர்களும் கலந்து கொண்டு பொதுமக்களிடம் விழிப்புணர்வு அறிவுரைகளை கூறினார்கள்.
