நிவர் அசுர புயலிலிலும் கொட்டும் மழையிலும் மக்கள் உயிரை காப்பாற்றிய துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள்.
O.M.R துரைப்பாக்கம் மற்றும் குரோம்பேட்டை மற்றும் சோழிங்கநல்லூர் சாலை சந்திக்கும் இடத்தில் நேற்று இரவு பெய்த மழையில் சாலை முழுவதும் தண்ணீரால் சூழ்ந்த நிலையில் எந்தவித வாகனமும் மற்றும் நடந்து கூட போகமுடியாத சூழ்நிலையில் இருப்பதை பார்த்த போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் தன்னுடைய சொந்த செலவில் இயந்திரங்கள் வரவழைத்து மற்றும் தானே சாலையில் உள்ள corporation manual மூடியை அப்புறபடித்தி கிட்டத்தட்ட _20- பதிற்கும மேலான மூடியை திறந்து தண்ணீர் அந்த குழிக்குள் போகும்படி வழிவகுத்தார்.இரவு முழுவதும் மக்களுக்காக தான் ஒருவரே மழையில் நனைந்தபடி சாலையில் குழியில் யாரும் விழுந்துவிடாதபடி ரப்பிஸ் மணல் ஜல்லி போன்ற பொருட்களை கொண்டு பள்ளத்தை மூடினர்.சாப்பிடாமல் கூட மறுநாள் காலைவரை அந்த பணியை சிறப்பாக மக்கள் சிரமமின்றி செல்ல போக்குவரத்து பாதையை சரியான படி ஒழுங்குபடுத்தியுள்ளார்.இப்படி மக்களுக்கு கொரோனா விழிப்புணர்விலும் பொதுவான காரியத்திலும் அநேக நன்மையான காரியத்தில் மக்களுக்கு சேவை என கருதாமல் தியாகமாக செய்து வருகிறார்.இதுமட்டுமல்லாமல் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு காலை உணவு வழங்கியுள்ளார். துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் ஐயா திரு.வெங்கடேஷன் அவர்கள் இவர் காவலதுறையினரிடையே உதாரணமாக திகழ்ந்து வருகிறார்.
