தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த நபரை குண்டர் தடுப்பு காவலில், சிறையில் அடைத்த மதுரை மாவட்ட காவல்துறையினர்.
மதுரை மாவட்டம். சோழவந்தான் காவல் நிலைய குற்ற வழக்கில் தொடர்புடைய, தொடர் திருட்டு மற்றும் பல்வேறு குற்ற வழக்குகளில் ஈடுபட்டு வந்த, கார்த்தி (எ) சுண்டு என்பவரை, மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் . திரு.சுஜித் குமார் IPS, அவர்களின், பரிந்துரையின் பெயரில், மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.அன்பழகன் IAS, அவர்கள், மேற்படி குற்றவாளியை குண்டர் தடுப்புக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பித்தது மூலம், மேற்படி நபர் மத்திய சிறையில் குண்டர் தடுப்புக் காவலில் அடைக்கப்பட்டார்.
