மதுரை செல்லூர் போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞர் கைது
மதுரை செல்லூர், போஸ் வீதி பகுதியில் கஞ்சா விற்பனை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
மதுரை, செல்லூர் பகுதியில் உள்ள போஸ் வீதியில் சிலர் கஞ்சா விற்பனை செய்து வருவதாக செல்லூர் D2, காவல் நிலையத்திற்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
ரகசிய தகவலின் அடிப்படையில் ஆய்வாளர் திரு. கோட்டைச்சாமியின் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் D.ராஜாஅவர்கள் அந்த பகுதிக்கு சென்ற போது, சந்தேகத்துகுறிய வகையில் அமர்ந்திருந்த இளைஞரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் அதே பகுதியை சேர்ந்த முத்துமாணிக்கம் என்பதும் அவர் கஞ்சா பொட்டலங்கள் விற்பனை செய்வதும் தெரிய வந்தது. அதனை தொடர்ந்து அவரை கைது செய்த சார்பு ஆய்வாளர் D.ராஜா அவர்கள் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
