
திண்டுக்கல் மாவட்டத்தில் கார்த்திகை திருநாள் இன்று காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்
29:11:2020 திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் காவல்துறையினர் மற்றும் ஊர்க்காவல் படையினர் கார்த்திகை திருநாள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர் திண்டுக்கல் மாவட்டம் நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன் அவர்கள் தலைமையில் நகர் தெற்கு காவல் நிலையத்திற்க்கு உட்பட்ட பகுதிகள் மலைக்கோட்டை, மணிமண்டபம் திப்பு, சுல்தான் மண்டபம், மொச்சை கொட்டை, பிள்ளையார் கோவில், தீயணைப்பு நிலையம் சந்திப்பு, போன்ற இடங்களில் பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை காவலர்கள் மற்றும் ஊர்க்காவல் படை காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு நகர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு. மணிமாறன்,அவர்கள் பொதுமக்கள் யாரும் கார்த்திகை தீபம் ஏற்ற கோவிலுக்குள் அனுமதிக்க கூடாது , கூட்டம் கூட அனுமதிக்க கூடாது என்று அறிவுரை வழங்கினார்
