மதுரையில், ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லையென்றால் பெட்ரோல் இல்லை
சென்னையை தொடர்ந்து மதுரையில் ஹெல்மெட், சீட் பெல்ட் அணியவில்லை என்றால் பெட்ரோல் இல்லை என போக்குவரத்து துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் ஹெல்மெட் , சீட் பெல்ட் அணிந்து வர வேண்டும் என பெட்ரோல் பங்குகளில் அறிவிப்பு பலகை வைக்க போக்குவரத்து காவல் துறை உத்தரவிட்டதையடுத்து, மதுரையிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படுகிறது. இது குறித்து தமிழ்நாடு பெட்ரோல் வணிகர்கள் சங்கத் தலைவர் செல்வம் கூறியதாவது. பெட்ரோல் பங்கிற்கு டூவீலரில் வருவோர் ஹெல்மெட் , காரில் வருவோர் சீட் பெல்ட் அணிந்து வந்து ஒத்துழைப்பு தர வேண்டும் விலை மதிப்பில்லா உயிரை காக்க இவை அவசியம் என ஒவ்வொருவரும் உணர வேண்டும் இது குறித்து சங்கம் சார்பில் ஆலோசனை செய்து மதுரையில் உள்ள அனைத்து பங்குகளிலும் அறிவிப்பு பலகை வைக்கப்படும். கொரோனா பாதிப்பு குறைந்தாலும் சில மாதங்களுக்கு முககவசம் அணியும் பழக்கத்தை பின்பற்ற வேண்டும் என்றார்.
