
கோடியூர் நெடுஞ்சாலையில் மினிசரக்கு வாகனங்கள் நேருக்கு நேர் மோதிகொண்டதில் டிரைவர் சாவு, பெண் படுகாயம்.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே குளிக்காடு கிராமத்தை சேர்ந்த மினிசரக்கு வாகன ஓட்டுநர் முருகன் (வயது.39)
இவர் நேற்று முன்தினம் மினி சரக்கு வாகனத்தில் காய்கறி பாரம் ஏற்றுவதற்க்கு இராயக்கோட்டையில் இருந்து பாலக்கோடு நோக்கி வந்துகொண்டிருந்தார்.
அவருடன் மகேந்திரமங்கலத்தை சேர்ந்த கூலி தொழிலாளி சங்கீதா (வயது. 30) என்பவரும் வந்து கொண்டிருந்தார்.
கோடியூர் நெடுஞ்சாலை அருகே வந்து கொண்டிருந்தபோது எதிரே வந்த மினி சரக்கு வாகனம் மோதியதில் முருகன் சங்கீதா இருவரும் பலத்த காயம் அடைந்தனர்.
அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு பாலக்கோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
முருகனை நேற்று மேல்சிகிச்சைக்காக கிருஷ்ணரி தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும்போது வழியிலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மகேந்திரமங்கலம் போலீசார் முருகன் உடலை பிரேத பரிசோதனைக்காக பாலக்கோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
