Police Recruitment

மதுரை தத்தனெரி கண்மாய்கரை பகுதியில் குடிக்கு அடிமையானவர், தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை தத்தனெரி கண்மாய்கரை பகுதியில் குடிக்கு அடிமையானவர், தூக்குப் போட்டு தற்கொலை, செல்லூர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், செல்லூர் D2, காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட பகுதியான தத்தனெரி,கண்மாய்கரை, கனேசாபுரத்தில் குடும்பத்தோடு வசித்து வருபவர் பாண்டி மனைவி திருமதி லெக்ஷிமி வயது 62/2020, இவருடன் உடன்பிறந்தவர்கள் மொத்தம் 5 பேர் இவர்களில் கடைசித் தம்பி பெயர் தர்மர் வயது 50/2020, இவர் சிலைமான் பகுதியில் ரயிவே கேங்மேனாக வேலை பா்த்து வந்தார், இவருடைய மனைவி 10 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து விட்டார் இந்த நிலையில் இவருக்கு குடி, மற்றும் கஞ்சா பழக்கம் இருந்து வந்த நிலையில் கடந்த 4 ம் தேதி குடி பழக்கத்தினால் ஏற்பட்ட வயிற்று வலி தாங்காமலும், மனைவி இல்லா ஏக்கத்தினாலும் வீட்டில் தனக்கு தானே தூக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார். விபரம் தெரிந்த இவரது அக்கா லெக்ஷிமி வயது அவர்கள் செல்லூர் D2, காவல் நிலையத்தில் புகார் அளித்து சட்டப்படி விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து அவர்கள் குல வழக்கப்படி உடலை நல்லடக்கம் செய்ய உடலைப் பெற்றுத் தரும்படி வேண்டிக் கொண்டார், புகாரை பெற்றுக் கொண்ட காவல் ஆய்வாளர் திரு கோட்டைச்சாமி அவர்கள் விரைந்து செயல்பட்டார், ஆய்வாளர் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திருமதி. லெக்ஷிமி அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

Leave a Reply

Your email address will not be published.