மதுரை, மேலூர் சாலை விபத்தில் சிக்கவிருந்த மூதாட்டியை மீட்டு பத்திரமாக அவரது வீட்டிற்கு அனுப்பி வைத்த காவலர், குவியும் பாராட்டு
மதுரை மாவட்டம், மேலூர் அருகே டெம்பிள் சிட்டி உணவகத்தின் அருகே, வயதான நிலையில் மூதாட்டி ஒருவர் சாலையை கடக்க முற்பட்ட போது விபத்தில் சிக்கும் சூழல் ஏற்பட்டது. இதனை கண்ட மேலூர் நெடுஞ்சாலை ரோந்து போலீசார் கண்ணன் என்பவர் அந்த மூதாட்டியை பத்திரமாக மீட்டு அவ்வழியை சென்ற வாகனத்தில் அவரது இருப்பிடத்துக்கு பத்திரமாக அனுப்பி வைத்தார். மனித நேயத்துடன் நடந்து கொண்ட காவலர் கண்ணன் அவர்களை சக காவலர்களும் பொது மக்களும் பாராட்டி வருகின்றனர்
செய்தி தொகுப்பு
M.அருள்ஜோதி
மாநிலசெய்தியாளர்.
