பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நத்தம் நெடுஞ்சாலை ரோந்து காவல்துறையினர்
16.12.2020 திண்டுக்கல் மாவட்டம். சாணார்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மேட்டுக்கடை அருகே நத்தம் நெடுஞ்சாலை ரோந்து பணியில் இருந்த சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.செல்வராஜ்
அவர்கள் அங்குள்ள பொதுமக்களை அழைத்து கொரோனா நோய்த்தொற்று குறித்தும், அதிலிருந்து நம்மை எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது என்பது குறித்தும், பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் என்பது குறித்தும், அடிக்கடி கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்ய வேண்டும் என்பது குறித்தும், பயணத்தின்போது அனைவரும் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பது குறித்தும் பொதுமக்களிடையே எடுத்துக் கூறி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
