Police Recruitment

மதுரை, K.K.நகரில், கடன் தொல்லையால், மருந்தாளுனர் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை, K.K.நகரில், கடன் தொல்லையால், மருந்தாளுனர் தூக்குப் போட்டு தற்கொலை, அண்ணாநகர் போலீசார் விசாரணை

மதுரை மாநகர், அண்ணா நகர் E 3, காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான K.K நகர் 2 வது குறுக்கு தெருவில் வசித்து வருபவர்கள் வேதவள்ளி, ஆன்ரூஆரோக்கிய ஆனந்த், இவர்கள் பெற்றோர் சம்மதத்தோடு
கடந்த 21.01.2008 ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டவர்கள், இவர்களுக்கு தாமஸ் மரியோ கிங்ஸ்லி, கேத்ரின் மேக்னோ, என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் மனைவி வேதவள்ளி, அண்ணாநகர் E 3, காவல் நிலையத்திற்கு எதிரே உள்ள மீனாட்சி மெடிக்கல்ஸ் என்ற மருந்து கடையில் விற்பனையாளராக பணி புரிந்து வருகிறார்.
கணவர் பொன்னமராவதியில் துர்கா மருத்துவ மனையில் மருந்தாளுநராக பணியாற்றி வருகிறார்
கடந்த 11/12/2020 அன்று காலை 10 மணிக்கு வேலைக்கு சென்று மாலை 6 மணிக்கு வந்து விட்டார் மனைவி வேதவள்ளி தன் பணி முடித்து மாலை 6.15 மணியளவில் தன் வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் முன் கதவு பூட்டியிருந்தது, உடனே பக்கத்தில் உள்ள கம்பி வலையை வளைத்து கதவை திறந்து உள்ளே பார்த்த போது இவரது கணவர் நீண்ட சால்வையால் தனக்கு தானே தூக்கு மாட்டிக்கொண்டு தொங்கியுள்ளார், உடனே அவரை காப்பாற்றும் நோக்கத்தோடு கழுத்தில் இருந்த சுருக்கை அவிழ்த்தனர், அப்போது எதிரே இருந்த வழக்கறிஞர் அலுவலகத்திற்கு வந்த கட்சிக்காரர் 108 க்கு போன் செய்ய ஆம்புலன்ஸ் விரைந்து வந்தது, அவர்கள் மேற்படி தூக்கில் தொங்கிய நபர் இறந்து விட்டதை உறுதி செய்தனர், இதனை தொடர்ந்து இறந்தவரின் மனைவி வேதவள்ளி அவர்கள் அண்ணாநகர் E3, காவல் நிலையம் நேரடியாக சென்று தன் கணவர் இறப்பு சம்பந்தமாக சட்டப்படி விசாரணை நடவடிக்கை எடுக்குமாறு புகார் அளித்தார், புகாரினை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திரு. பூமிநாதன் அவர்கள் விரைந்து நடவடிக்கையெடுத்தார், ஆய்வாளர் பூமிநாதன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு ரீகன் அவர்கள் தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறார். இது சம்பந்தமாக மனைவி வேதவள்ளி கூறுகையில் அவர் காலையில் வேலைக்கு செல்லும் முன் தனக்குள்ள கடன் சம்பந்தமாக மன உளைச்சலில் இருந்தார் என்றார், மேலும் இறந்தவரின் அறையில் இருந்த அவரால் எழுதப்பட்ட டைரியிலும் அவர் கடன் தொல்லையால் தான் தற்கொலை செய்து கொள்வதாக எழுதியிருந்ததாக தெரிகிறது.

Leave a Reply

Your email address will not be published.