20 வருடங்களாக கொலை வழக்கில் தலைமறைவான 3 குற்றவாளிகளை வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. அமுதா அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்து சிறையில் அடைத்தனர்
சென்னை வளசரவாக்கம் பகுதியில் கொலை வழக்கில் தேடப்பட்டு வந்த தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மணி, வினித், ஆனந்த், ஆகிய 3 குற்றவாளிகளும் நீதி மன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால் இவர்கள் மூவர் மீதும் நீதி மன்றம் பிடியாணை பிறப்பித்தது. அதன் பேரில் வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் திருமதி. வி. அமுதா தலைமையில் உதவி ஆய்வாளர் திரு. ரமேஷ் கண்ணன் மற்றும் காவலர்கள் அடங்கிய காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு, பல வருடங்களாக தலை மறைவாக இருந்த 3 குற்றவாளிகளையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளினர்களை காவல் அதிகாரிகள் பாராட்டி வெகுமதிகள் மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கி கவுரவித்தனர்.
செய்தி தொகுப்பு, மாநில செய்தியாளர்,M.அருள்ஜோதி
