யாரும் இல்லை என கவலைப்பட வேண்டாம்… உங்கள் சொந்தங்களாக நாங்கள் இருக்கிறோம்…
மதுரை மாநகர காவல் துறை
மதுரை மாநகர், அவணியாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான ஜெயவிலாஸ் மேம்பாலத்திற்கு கீழ் 70 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்துவிட்டார். அவரது உடலை சட்டப்படி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி உடல் கூறாய்வு முடித்து, அதன் பின் அவரது உடலை உறவினர்கள் யாரும் உரிமை கோரி வராத காரணத்தினால்¸ அவனியாபுரம் காவல் நிலைய சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. பாண்டி மற்றும் காவலர் 3346 திரு. சரவணகுமார் இருவரும் இணைந்து முழு மரியாதையுடன் மதுரை தத்தனேரி இடுகாட்டில் நல்லடக்கம் செய்தனர்.
மேற்படி கவலர்களின் மனித நேயத்தை சக காவலர்களும், பொது மக்களும் வெகுவாக பாராட்டினர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
