கோவிலுக்கு நேந்து விட்ட மாடு மர்மமான முறையில் இறப்பு கீழவளவு போலீசார் விசாரணை
மதுரை மாவட்டம் கீழவளவு கிராமம் அம்பேத்கார் நகர் (Sc/Pr) மக்களுக்கும் சொந்தமான காளி கோவில் உள்ளது இந்த கோவிலுக்கு நேத்தி கடனாக மக்கள் நேந்துவிட்ட 10 மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளனர் இந்த மாடுகள் அனைத்தும் திறந்த வெளியிலேயே சுற்றி திரியும் இந்நிலையில் தற்போது ஒரு காளை மாடு வயிறு ஊதி இறந்து விட்டது இந்த மாட்டின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக காளி கோவில் பூசாரி ஜெகதீஸ் என்பவர் தற்போது நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்
இதன் அடிப்படையில் கீழவளவு காவல் நிலைய வட்ட ஆய்வாளர் திரு.சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு. சுதன் அவர்கள் வழக்கு பதிவு செய்து, கீழவளவு கால்நடை மருத்துவர் திருமதி. ஆமினா அவர்கள் இறந்த மாட்டை பிரேதப் பரிசோதனை முடித்து மாட்டின் உள் உறுப்பு பாகங்களை சேகரித்து ஆய்விற்காக அனுப்பி வைத்துள்ளார்கள். மற்றும் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றார்கள்.
செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி,மாநில செய்தியாளர்