விழுப்புரம் மாவட்டம்:-
பல கோரிக்கைகளை வழியுறுத்தி போராட்டம் செய்த மாற்றுதிறனாளிகளுக்கு விருந்துணவு…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை 6 இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்நாடு அனைத்து வகை மாற்று திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தினர் 475 பேர் கைது செய்யப்பட்டனர்.
இதில், வானூர் வட்டாட்சியர் அலுவலகம் முன் போராட்டத்தில் ஈடுபட்ட 120 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் கைதுசெய்து தங்க வைக்கப்பட்டனர்.
போராட்டம், மறியல் போன்றவைகளில் ஈடுபட்டு கைது செய்யப்படுவோருக்கு காவல் துறை சார்பில் உணவு ஏற்பாடு செய்யப்படும்.
ஆனால் வழக்கமாக அந்த உணவு சாதாரண உணவு வகைகள் பொட்டங்களில் வழங்கப்படும்.
இருப்பினும் வானூரில் போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்டவர்களுக்கு தலை வாழை இலை போட்டு காவல்துறையினர் உணவு வழங்கியது பெரும் இன்ப அதிர்ச்சியாகவே இருந்தது.
மாற்றுத்தினாளிகள் அடைத்து வைக்கப்பட்டிருந்த திருமண மண்டபத்தின் உணவு பரிமாறும் கூடத்தில் அவர்கள் அனைவரும் அமர வைக்கப்பட்டு, காவலர்களே அவர்களுக்கு உணவு பரிமாறியது நெகிழ்ச்சியாக இருந்தது.
காவலர்கள் என்றாலே பொதுமக்களிடம் கடுமையாக நடந்துகொள்வார்கள் என்ற எண்ணம் பொதுமக்கள் மத்தியில் இருந்து வரும் நிலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு தங்கள் கைகளால் உணவு வழங்கியது மனிதாபிமானம் தங்களுக்கும் உண்டு என்பதை எடுத்துக் காட்டும் வகையில் இருக்கிறது என்பதை அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.