மதுரை, மேலூர் அருகே அட்டப்பட்டி பகுதியில் நிலத் தகராறில் அடிதடி, கீழவளவு போலீசார் வழக்கு பதிவு
மதுரை மாவட்டம், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலைய சரக எல்லைக்கு உட்பட்ட பகுதியான அட்டப்பட்டி, AK நகரில் வசிக்கும் கருப்பையா மனைவி கலைச்செல்வி வயது 30/2020, இவர் அவரது பகுதியில் வீடு ஒன்று கட்டி வருகிறார். வீடு கட்டும் போது பிரச்சனை செய்து, குமார், பாரதிராஜா, சுதா, தவமணி, நித்யா, பாண்டிக்குமார், தேவி, தனம், கருப்பையா பெரியசாமி, வளர்மதி, ஆகியோர் கலைசெல்வியையும் அவரது மாமனாரையும் கைகளால் அடித்தும் கட்டிடத்தை சேதப்படுத்தியும் தகராறு செய்துள்ளார்கள், இதனை தொடர்ந்து கலைசெல்வி அவர்கள் கீழவளவு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் புகாரை பெற்றுக் கொண்ட காவல் துறையினர் விசாரணை செய்ததில் கலைசெல்விக்கும், எதிரிகளிக்கும் ஏற்கனவே நிலத் தகராறு இருந்து வந்தது தெரியவந்தது, மேலும் ஆய்வாளர் திரு. சார்லஸ் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.செந்தாமரை கண்ணன் அவர்கள் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகின்றனர்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
