மதுரை காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள், குவியும் பாராட்டுக்கள்
மதுரை மாநகரத்தில் உள்ள காவல் நிலையங்களில் வரவேற்ப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பதைபொது மக்கள் வரவேற்றுள்ளனர்.
மதுரை மாநகரத்தில் இயங்கும் அனைத்து காவல் நிலையங்களிலும் வரவேற்ப்பாளராக காவலர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர்களில் பெரும்பாலானோர் பெண் காவலர்களே வரவேற்ப்பாளராக இருப்பர்.
இவர்கள் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தினசரி காலை 9 மணி முதல் இரவு 8 மணி வரை ( உணவு இடை வேளை தவிர)அலுவலில் இருப்பார்கள், அன்றாடம் பல் வேறு அலுவல்களாக காவல் நிலையத்திற்கு வரக்கூடிய மனுதாரர், மற்றும் எதிர் மனுதாரர் அனைவருக்கும் பொதுவான அலுவலராக செயல்படுவார். மேலும் வரவேற்பு காவலரிடம் தகவல் பெறக்கூடிய பொது மக்கள் அமர்வுதற்கு போதுமான இருக்கை வசதிகள் ஒவ்வொரு காவல் நிலையத்திலும் செய்யப்பட்டுள்ளன.மேலும் அதிகம் படிக்காத புகார் மனு எழுத இயலாத நிலையில் காவல் நிலையத்திற்கு வருகிற பொது மக்களுக்கு அவர்களின் பிரச்சனையை பரிவுடன் கேட்டு புகார் மனு எழுதி கொடுப்பதுடன் காணாமல் போன ஆவணங்கள் தொடர்பான புகார்களை வலைதளத்தில் எவ்வாறு பொது மக்கள் பதிவு செய்ய வேண்டும் என்பது பற்றியும் இதற்க்கு காவல் துறையினரால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் தெரிந்து கொள்ள உதவியாக இருப்பார்கள்.
எனவே வரவேற்பு காவலர்களின் பணியை காவல் நிலையத்திற்கு வரும் பொது மக்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு மதுரை மாநகர ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா கெட்டுக் கொண்டுள்ளார்.
