மதுரை மாநகரில் சட்டவிரோத மது விற்பனை, 16 பேர் கைது.98 மது பாட்டில்கள் பறிமுதல்
மதுரை மாநகர பகுதிகளில் மது கடைகள் திறப்பதற்கு முன்பே சட்டவிரோதமாக டீ கடைகள், மற்றும் பொது இடங்களில் மது விற்பனை செய்த 16 பேர் நேற்று மதுரை மாநகர காவல் துறை தரப்பில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடமிருந்து சுமார் 98 மதுப் பாட்டில்கள் பறிமுதல் செய்ததாகவும் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
