மதுரை தெப்பகுளம் பகுதியில் பூக்கடை காரரிடம் கத்தியை காட்டி வழிப்பறி, இருவர் கைது
மதுரை, தெப்பகுளம் காவல் நிலைய சரக எல்லைக்குட்பட்ட பகுதியான புது ராமநாதபுரம் ரோடு, பழைய மீனாட்சி நகரில் வசித்து வருபவர் மலைராஜ் மகன் உலகநாதன் வயது 40, இவர் தெப்பக்குளம் கிருஷ்ணா டீ கடை எதிரில் பூக்கடை வைத்து நடத்தி வருகிறார். இவர் நேற்று அதிகாலை 6 மணியளவில் தனது பூக்கடைக்கு வருவதற்காக தெப்பக்குளம் சென்னை ஹாட் பப்ஸ் கடைக்கு அருகில் நடந்து வரும்போது அவருக்கு நன்கு தெரிந்த ரவுடிகளான தவளை ரவி, மற்றும் இட்லி முத்துக்குமார் ஆகிய இருவரும் அவரிடம் வந்து தன் கையில் வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி அவர் சட்டை பையில் வைத்திருந்த ₹ 300/− பறித்துக்கொண்டு வெளியே சொன்னால் குத்தி கொலை செய்து விடுவேன் என மிரட்டி விட்டு ஓடி விட்டனர், உடனே உலகநாதன் அவர்கள் தெப்பகுளம் காவல் நிலையம் வந்து நடந்த சம்பவத்தை புகாராக கூறினார், புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் திரு கனேசன் அவர்களின் உத்தரவின்படி சார்பு ஆய்வாளர் திரு.மதுரைவீரன் அவர்கள் வழக்கு பதிந்து மேற்படி குற்றவாளிகளை கைது செய்து ஆய்வாளர் திரு. கனேசன் அவர்கள் விசாரணை நடத்தி நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தி நீதி மன்ற உத்ரவின்படி சிறையில் அடைத்தனர்.
