பொது மக்களின் பாராட்டை பெற்ற போக்குவரத்து காவல் துறை
மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில், கட்டபொம்மன் சிலை அருகில் உள்ள சாலையில் போக்கு வரத்திற்கு இடையூறாகவும் மற்றும் விபத்துக்களை ஏற்படுத்தும் வகையிலும் இருந்த பெரிய பள்ளங்களை போக்கு வரத்து காவல் இணை ஆணையர் உயர் திரு. சுகுமாறன் IPS & போக்குவரத்து காவல் கூடுதல் உதவி ஆணையர் திரு. திருமலைகுமார் அவர்கள் உத்தரவின் பேரில் திடீர்நகர் தெற்கு போக்குவரத்து காவல் ஆய்வாளர் திருமதி.பால்தாய் மற்றும் சார்பு ஆய்வாளர் திரு. சின்னகருத்தபாண்டி அவர்கள் முன்னிலையில் காவலர் (3970] திரு. முத்து ராஜ் அவர்களால் கட்டபொம்மன் சிலை அருகில் சாலை சீரமைக்கப்பட்டது. இதனால் பொது மக்கள் சாலையில் சிரமமின்றி பயணம் மேற்கொள்ள வழிவகை செய்து கொடுத்த போக்குவரத்து காவல் துறையை பொது மக்கள் வெகுவாக பாராட்டினர்.
