உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் சென்னை முதலிடம்
உலகிலேயே சிசிடிவி கேமராக்கள் அடர்த்தி விகிதத்தில் ஒரு சதுர கிலோ மீட்டருக்கு 657 சிசிடிவி கேமராக்கள் என்ற எண்ணிக்கையில் சென்னை முதலிடத்தில் உள்ளது. லண்டன் மற்றும் பெய்ஜிங் நகரங்களை பின்னுக்கு தள்ளி சென்னை முதலிடத்தை பிடித்தது. இந்த சாதனைக்கு வித்திட்டவர் சென்னை பெருநகர காவல் ஆணையராக இருந்த ஏ.கே.விஸ்வநாதன் அவர்கள்தான், அவர் காவல் ஆணையராக இருந்த போது குற்றச்செயல்களை தடுக்க மூன்றாம் கண் என்ற பெயரில் சென்னை மாநகரம் முழுவதும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தும் நடவடிக்கை மேற்கொண்டார் இதில் எதிர்பார்த்த பலன் கிடைக்கவே பொது மக்கள், வணிகர்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் மேலும் அதிக அளவில் சிசிடிவி கேமராக்களை பொருத்தும் பணிகளை விரைவுபடுத்தினார் அதனுடைய பலனாக சென்னையில் குற்றசெயல்கள் படிப்படியாக குறைந்தது. குற்றசெயல்களில் ஈடுபடுபவர்கறை கண்டறிந்து விரைந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இன்று அதுவே ஒரு சாதனையாக உருமாறி சென்னை காவல் துறைக்கு பெருமை சேர்த்துள்ளது.
