மதுரை மாவட்டம் மேலூர் அருகே மணியம்பட்டியில் கணவரை காணாமல் மனைவி கீழவளவு காவல் நிலையத்தில் புகார், போலீசார் தேடி வருகிறார்கள்
மதுரை மாவட்டம் மேலூர் தாலுகா, கீழவளவு காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட மணியம்பட்டி பகுதியில் வசித்து வருபவர் சின்னகாளை மகன் ராஜேந்திரன் வயது 40, இவரது மனைவி ரதி வயது 36, இவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அடிக்கடி குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் இருந்து வந்த நிலையில் இவரது மனைவி கோபித்துக்கொண்டு தன் தாய் வீட்டிற்கு சென்றார், பிறகு பெரியவர்கள் அவர்களை சமரசம் செய்து வைத்துள்ளார்கள் அதன்பின் கடந்த 29 ம் தேதி கணவர் ராஜேந்திரனை பற்றி யாரோ தவராக நோட்டீஸ் அடித்து ஒட்டியுள்ளார்கள் இதன் காரணமாக அவர் மனமுடைந்து எங்கோ சென்று விட்டார், அவரை தேடி கண்டுபிடிக்கும் பொருட்டு கீழவளவு காவல் நிலையத்தில் மனைவி ரதி அவர்கள் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் ஆய்வாளர் சார்லஸ் அவர்களின் உத்தரவின்படியும் சார்பு ஆய்வாளர் திரு முருகேசன் அவர்கள் வழக்கு பதிவு செய்து காணாமல் போன கணவரை தேடி வருகிறார்கள்
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்
