இளைஞர் அளித்த புகாரின் மீது உடனடி நடவடிக்கை தவற விட்ட 45000/− பணத்தை உரியவரிடம் ஒப்படைத்த காவல் உதவி ஆய்வாளர்
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர் பேட்டை அருகில் உள்ள பாலி கிராமத்தை சேர்ந்த இளைஞர் பிரகாஷ் தனது சொந்த தேவைக்காக பேன்ட் பாக்கெட்டில் வைத்திருந்த ரூ. 45000/− பணத்தை உளுந்தூர்பேட்டை பஸ் ஸ்டான்ட்டு பகுதியில் தவற விட்டதை கண்டு பதறிப்போன இளைஞர் உடனடியாக உளுந்தூர்பேட்டை காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு. செல்வநாயகம் அவர்களிடம் புகார் அளித்தார், உடனடியாக பஸ் ஸ்டான்ட் பகுதிக்கு விரைந்து சென்று தீவிர விசாரணை நடத்தி ஒரு மணி நேரத்தில் தவர விட்ட பணத்தை கண்டுபிடித்து அவரிடம் ஒப்படைத்தார்
துரிதமாக செயல்பட்டு, உடனடி நடவடிக்கை எடுத்த காவல் உதவி ஆய்வாளர் திரு, செல்வநாயகம் அவர்களின் செயலை கண்டு பொது மக்கள் மற்றும் காவல் துறையினர் வெகுவாக பாராட்டினர்,
