குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அடையார் காவல்துறையினர்
சென்னை அடையார் காவல்துறை சார்பாக முட்டுக்காடு, கரிகாட்டு குப்பம் போன்ற பகுதியில் வசிக்கும் பொதுமக்களுக்கு குழந்தைகள், பெண்களின் மீதான வன்கொடுமை, குறிப்பாக பெண்குழந்தைகள் பாலியல் தொந்தரவுகளால் அதிகம் பாதிக்கப்படுவதாலும் மேலும் தங்களின் பிரச்சனைகளை பெற்றோர்களிடம் கூட தெரிவிக்க தயக்கம் காட்டுவதாலும் அவற்றை களையும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் பெண்கள் இடையே பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. மேலும் குழந்தைகள் சந்திக்கும் பாலியல் ரீதியான தொந்தரவுகளை அஞ்சல் அட்டை (Postal Card) மூலமாக புகார் அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தும், பெற்றோர்களுக்கும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு வழங்கியதுடன் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டி நடத்தப்பட்டு பங்கு பெற்ற குழந்தைகள் அனைவருக்கும் பரிசு பொருட்களுடன் அடையார் துணை ஆணையாரின் அலுவலக முகவரி இடப்பட்ட அஞ்சல் அட்டைகள் வழங்கப்பட்டது.