சென்னையில் சட்டவிரோத செயலில் ஈடுபடுபவர்களை கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவு.
G-3 Kilpauk cops arrested 12 gamblers including 5 womens- cash Rs.72,780/- and deck of cards were seized(10.01.2021)
சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக பணம் வைத்து சூதாட்டம் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு. மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் உத்தர விட்டுள்ளதின் பேரில் G-3 கீழ்ப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் 09.01 2021 அன்று சாஸ்திரி நகர் 2வது தெரு கீழ்ப்பாக்கம் பகுதியில் உள்ள வீட்டை கண்காணித்தபோது அங்கு பணம் வைத்து சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட1. ராஜ் (எ) ஆரோக்கிய ராஜ் ,வ/24, ஆயிரம் விளக்கு.2. நட்ராஜ் வ/50, சிந்தாதிரிப்பேட்டை 3. கர்ணன் வ/39 ஓட்டேரி, 4. பாபு ரெட்டி, வ/50, அமைந்தகரை,,5. ராஜா, வ/24 ராயப்பேட்டை 6. சரத்குமார், ராயப்பேட்டை, சீனிவாசன், மயிலாப்பூர் மற்றும் 5 பெண்கள் உட்பட ஆகிய 12 நபர்களை கைது செய்து அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.72,780/_மற்றும் சீட்டுக் கட்டுகள் கைப்பற்றப்பட்டு நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.