மதுரை மாநகர், மேலூர் அருகே முத்துச்சாமிபட்டியில் சேலையில் தொட்டி கட்டி விளையாடிய சிறுவன் இறப்பு
மதுரை மாநகர், மேலூர் அருகே கீழவளவு காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியான முத்துச்சாமிபட்டி சுமதிபுரத்தில் வசித்து வருபவர் சரவணன், தவமணி தம்பதியர், இவர்களின் 13 வயது மகன் சந்துரு முத்துச்சாமிபட்டி அரசு உயர் நிலை பள்ளியில் 8 ம் வகுப்பு படித்து வருகிறார், இவருக்கு 2 தம்பிகள் உள்ளனர், அவரது அப்பா வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார், அம்மா தவமணி அவர்கள் விவசாயக்கூலி வேலை பார்த்து வருகிறார் இவர் கடந்த 9 ம் தேதி மதியம் சுமார் ஒரு மணியளவில் தன் ஓட்டு வீட்டின் விட்டத்தில் சேலையில் ஊஞ்சல் போல் கட்டி அதில் நின்று கழுத்து வரை முருக்கி கொண்டு சுத்தி சுத்தி விளையாடி வந்துள்ளார், இதில் வேகமாக சுத்தி விளையாடும்போது சேலை கழுத்தில் இறுக்கி சம்பவ இடத்திலேயே இறந்து விட்டார். பிறகு அவரது அம்மா பார்த்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் சிங்கம்புணரி அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு மருத்துவர்கள் சோதித்து பார்த்து சிறுவன் இறந்து விட்டதாக கூறியுள்ளனர் தற்போது மருத்துவ மனையில் உள்ள சவக்கிடங்கில் அவரது உடல் உள்ளது. இந்த இறப்பு தொடர்பாக கீழவளவு காவல் நிலைய சார்பு ஆய்வாளர் திரு. சுதன் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
செய்தி தொகுப்பு, M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்.