Police Recruitment

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சு பணியாளர்களுக்கு சழற்கேடயம் மற்றும் வெகுமதியை ஆணையாளர் வழங்கினார்.

சென்னை பெருநகர காவல் ஆணையரகத்தில் பணியிடத்தை சிறப்பாகவும் தூய்மையாகவும் பராமரித்த அமைச்சு பணியாளர்களுக்கு சழற்கேடயம் மற்றும் வெகுமதியை ஆணையாளர் வழங்கினார்.

The commissioner of Police presents revolving shield and cash rewards to ministerial staffs who Maintain office premises clean and tidy(12.01.2021.)

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் உத்தரவின்பேரில் காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பணியிடம் தூய்மை பராமரிப்பில் சிறப்பாகவும் கோப்புகளை சரியாக கையாண்டு சிறந்த முறையில் பணிபுரியும் அமைச்சுப் பணியாளர்களை மாதந்தோறும் தேர்வு செய்து காவல் ஆணையாளர் தலைமையில் பண வெகுமதி மற்றும் சுழற்கேடயங்கள் வழங்கி ஊக்குவிக்கப் படுகின்றனர்.

அதன்பேரில் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு .மகேஷ்குமார் அகர்வால் இ.கா.பஅவர்கள் 12.01.2021 காலை காவல் ஆணையாளர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கடந்த டிசம்பர் மாதம் 2020இல் பணியிட அலுவலகத்தை தூய்மையாக பராமரித்து சிறப்பாக கோப்புகளை கையாண்டு பணிபுரிந்த Contingent -2 அலுவலக கண்காணிப்பாளர் 1. திருமதி .கனக துர்கா 2. உதவியாளர் திருமதி C. செல்வராணி ஆகியோருக்கு முதல் பரிசாக ரூபாய் 2000 மற்றும் வெற்றியாளருக்கான சழற்கோப்பையை வழங்கினார்.2 வந்து பரிசிற்காக பொதுப்பிரிவு 1. அலுவலகத்தை தேர்வு செய்து கண்காணிப்பாளர் 1. திரு.C. பாஸ்கரன் இளநிலை உதவியாளர் திரு.சிவபிரகாஷ் ஆகியோருக்கு ரொக்க பரிசாக ரூபாய் 1000 மற்றும் சழற்கோப்பையை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் துணை ஆணையாளர் திரு.K. ஸ்ரீதர் பாபு நுண்ணறிவு பிரிவு பெரோஸ் கான் அப்துல்லா நிர்வாகம் காவல் அதிகாரிகள் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.