திருநங்கைகளின் வாழ்வாதாரம் உயர்ந்திட சுயதொழில் புரிய உதவிய திருவல்லிக்கேணி துணை ஆணையாளர் அவர்கள்.
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் மதிப்பிற்குரிய திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப உத்தரவின்பேரில் ,சென்னையில் உள்ள திருநங்கைகள் வாழ்வாதாரம் உயர்ந்திடவும் , அவர்கள் சுயதொழில் ஈடுபட்டு கௌரவமான முறையில் வாழ்ந்திடும் அவையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை சென்னை பெருநகர காவல் துறை செய்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக ( 10.01.2021) மதியம் F-5 சூளைமேடு காவல் நிலைய வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட துணை ஆணையாளர் பொறுப்பு திரு. ஆர் கிருஷ்ணராஜ் இ. கா. பா அவர்கள் கலந்துகொண்டு பல்லாவரம் லயன்ஸ் கிளப் சார்பாக வழங்கப்பட்ட ரூ .80 ஆயிரம் மதிப்புள்ள தள்ளுவண்டிகளை , திருநங்கைகள் மோகனா மற்றும் சபிதா ஆகிய இருவருக்கும் வழங்கினார்.இதுவரை சூளைமேடு காவல் நிலைய போலீசார் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் 8 திருநங்கைகளுக்கு சுயதொழில் புரிய 8 தள்ளுவண்டிளை வழங்கியுள்ளனர். இந்நிகழ்ச்சியில் பல்லாவரம் லயன்ஸ் கிளப் தலைவர் திரு. அசோக், சூளைமேடு காவல் நிலைய ஆய்வாளர், காவல் ஆளிநர்கள் மற்றும் திருநங்கை அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
