மதுரை மாவட்டம், எழுமலை காவல் நிலைய ஆய்வாளர் திரு. தினகரன் அவர்கள் மாரடைப்பால் மரணம்.
மதுரை மாவட்டம், எழுமலையில் காவல் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தவர் தினகரன் வயது 51, தேனி மாவட்டம், வெள்ளையம்மாள்புரத்தை சேர்ந்த இவர் 2019 ம் ஆண்டு எழுமலை காவல் நிலையத்திற்கு ஆய்வாளராக பணிக்கு வந்தவர்.
மதுரை முடக்குச்சாலையில், மனைவி, மகள், மகனுடன் வசித்து வந்தார், நேற்று மாலை 5.30 மணியளவில், மைக்கில் பேசியபோது அவரிடமிருந்து பதில் கிடைக்கவில்லை சந்தேகமடைந்த போலீசார் இன்ஸ்பெக்டர்ஸ் குவாட்டர்ஸில் சென்று பார்த்தபோது அசைவற்ற நிலையில் இருந்தார்.
அவரை மருத்துவ மனைக்கு கொண்டு சென்று பார்த்தபோது அவர் மாரடைப்பால் மரணமடைந்தது தெரியவந்தது.
