புலன்விசாரணையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகளை தடுக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளை பெரும் செலவுதொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்….உயர்நீதிமன்றம்.
கோவையில் நடந்த மோசடி வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் கொடுத்த வாக்குமூலம் அடிப்படையில் அந்த பணத்தை பெற்று வைத்ததாக தூத்துக்குடி சாத்தான்குளத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டார். அப்போது தன்னை கோவை காவல்துறை அதிகாரிகள் சாலையில் வைத்து அடித்து வாகனத்தில் ஏற்றியதாக அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்க தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது…
புலன்விசாரணை போது உண்மையை வெளிக்கொண்டு வர காவல்துறையினர் சற்று பலப்பிரயோகம் செய்ய வேண்டி வரலாம். அனுமதிக்கப்பட்ட அளவில் மேற்கொள்ளலாம்.
அதை தவறாக கருதி காவல்துறை மீது நடவடிக்கை கூடாது.
ஒருவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டாலோ, கைது செய்யப்பட்டாலோ சம்பந்தப்பட்ட நபர்கள் அல்லது உறவினர்கள் காவல்துறை அதிகாரிகள் மீது புகார் செய்வது வழக்கமாகி விட்டது.
அவ்வாறு பெறப்படும் புகார்களை உடனடியாக உயரதிகாரிகள் விசாரித்து முடிவு செய்யாமல் நீண்டகாலம் வைத்திருந்தால் அது கீழமை அதிகாரிகளை விரக்தி கொள்ள செய்யும். அது தவிர்க்கப்பட வேண்டும்.
அதுபோல புலன்விசாரணை அதிகாரிகள் மீது ஒழுங்குநடவடிக்கை கோரி தாக்கல் செய்யப்படும் மனுக்களை கவனமாக பரிசீலிக்காமல் ஏற்றுக்கொள்வதோ உத்தரவிடுவதோ கூடாது.
புலன்விசாரணையை அல்லது புலன்விசாரணையை முடக்கும் வகையில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை அதிக செலவு தொகையுடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.
முருகேசன் Vs உள்துறை செயலாளர் மற்றும் பலர்.
2019(2)-TLNJ-CRL-225
