புதுக்கோட்டை மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் பயிற்சி பெற்ற ஊர் காவல் படையினருக்கு பயிற்சி நிறைவு விழா நடைபெற்றது
25.01.2021 புதுக்கோட்டை மாவட்டம் ஆயுதப் படை மைதானத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஊர்க்காவல் படையினரின் பயிற்சி நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முனைவர்.லோக பாலாஜி சரவணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார். காவல் துறையிடன் இணைந்து நேர்மையாகவும், மக்களின் நன்மதிப்பை பெற்றிடும் வகையில் கடமையாற்றுமாறு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுறுத்தினார். இந்த பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழாவில் புதுக்கோட்டை மாவட்ட கூடுதல் காவல் துணை கண்காணிப்பாளர்கள் திருமதி.ஜெரினா பேகம், திரு.ராஜேந்திரன், ஆயுதப்படை காவல் துணைக் கண்காணிப்பாளர்கள், ஆயுதப்படை காவல் ஆய்வாளர்,உதவி ஆய்வாளர்கள் மற்றும் காவலர்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
