மதுரை மாநகரில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் தெப்பத்திருவிழா, மிகவும் சிறப்பாக நடைபெற காவல்துறையினரின் பாதுகாப்பு
நேற்று 28.01.21 ம் தேதி காலை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் தெப்பத்திருவிழா மாரியம்மன் தெப்பக்குளத்தில் நடைபெற்றது. பொது மக்களின் பாதுகாப்பிற்காகவும் பொதுமக்கள் சிரமமின்றி சுவாமி தரிசனம் செய்வதற்காகவும் மதுரை மாநகர காவல் துறையினர் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டனர். மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்களின் உத்தரவின்படி தெப்பத்திருவிழாவிற்கு
நகரில் உள்ள பலவேறு காவல் நிலையங்கள், ஆயுதப்படை, ஊர்காவல்படை, உள்ளிட்டவற்றில் பணியாற்றும் 550 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர் மற்றும் சீருடை அணியாத போலீசாரும் கண்காணிப்பு பணியின் ஈடுபட்டனர், காவல்துறை சார்பில் பத்துக்கும் மேற்பட்ட ட்ரோன் கேமராக்கள் மேலே பறந்து கண்காணித்து வந்தன. குற்றச்சம்பவங்கள் ஏதும் நடைபெறாமல் முன்கூட்டியே தடுப்பதற்காகவும் குற்றவாளிகளின் நடமாட்டங்களை கண்காணிப்பதற்காகவும் மதுரை மாநகர காவல்துறையினர் மிகவும் சிறப்பாக ஏற்பாடுகள் செய்திருந்தனர். தெப்பகுளத்திற்கு வரும் அதிகமான பக்தர்கள் கூட்டம் மற்றும் அவர்களின் வாகனங்கள் பார்கிங் செய்வது காவல்துறையினருக்கு ஒரு சவாலாக இருந்த போதும் கூட, அவணியாபுரம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ. தங்கமணி அவர்களின் திறமையான முயற்றியால் அதுவும் சீர் செய்யப்பட்டது. ஆக காவல்துறையினரின் சிறப்பான பாதுகாப்பு பணியை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.
செய்தி தொகுப்பு M.அருள்ஜோதி, மாநில செய்தியாளர்.
