விருதுநகர் மாவட்டம்:-
ஶ்ரீவில்லிபுத்தூரில் பயங்கர ஆயுதங்களுடன் வந்து கொலை மிரட்டல் விடுத்த 8பேர் கைது…
ரமேஷ் வயது 27 த/பெ ஜான்சேவியர் என்பவர் ஶ்ரீவில்லிபுத்தூரில் 7/17 A2 ரைட்டன்பட்டி தெருவில் வசித்து வருகிறார்.
ரமேஷ் கடந்த 13.02.2021 அன்று ரேவதி திரையரங்கில் படம் பார்க்க அவரது நண்பர்களுடன் சென்றுள்ளார்.
அப்போது அதே ரைட்டன்பட்டி தெருவை சேர்ந்த
1.மில்டன் அசோக்குமார் வயது 24 த/பெ ஜான்சன்
2.அலெக்ஸ்பிரேம்குமார் வயது 21 த/பெ ஜான்சன்
3.ஸ்டாலின்பிரபாகரன் வயது 20 த/பெ ஜான்சன்
4.எட்வின்ராஜசேகர் வயது 24 த/பெ இம்மானுவேல்தாஸ்
5.சக்திவேல் வயது 25 த/பெ முருகன்
6.செந்தில்குமார் வயது 19 த/பெ முருகன்
7.செல்வம் வயது 24 த/பெ அர்சுணன்
8.கிருஷ்ணன் வயது 23 த/பெ காளிரத்தினம்
படம் பார்க்க வந்துள்ளனர்
அப்போது இந்த 8 பேரும் திரையரங்கினுள் படம் ஓடிக்கொண்டிருக்கும் போது திரைக்கு முன்னால் நின்று நடனம் ஆடியுள்ளனர்.
இதனை அந்த திரையரங்கில் வேலை பார்க்கும் இம்மானுவேல்தாஸ் மற்றும் ரமேஷின் நண்பர்களை கண்டித்துள்ளார்.
அப்போது ரமேஷின் நண்பர்களுக்கும் மில்டன் அசோக்குமார் நண்பர்களுக்கும் தகராரு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதத்தின் காரணமாக மில்டன் அசோக்குமார் மற்றும் அவரது நண்பர்கள் மொத்தம் 8பேர் 17.02.2021 அன்று அதிகாலை 1.00 மணியளவில் பயங்கர ஆயுதங்களுடன் ரமேஷின் வீட்டுக்கு சென்றுள்னர்.
அப்போது ரமேஷ் அவனது அம்மா மற்றும் தம்பிகள் தூங்கிகொண்டிருந்தனர்.
கதவு தட்டும் சத்தம் கேட்டவுடன் ரமேஷின் அம்மா ஜன்னல் வழியே பார்த்த போது மில்டன் அசோக்குமார் நண்பர்கள் பயங்கர ஆயுதங்களுடன் இருப்பதை பார்த்ததும் ஶ்ரீவில்லிபுத்தூரில் சீனியாபுரத்தில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்து வரச்சொல்லி இருக்கிறார்.
சீனியாபுரத்தில் உள்ள உறவினர்கள் ரமேஷின் வீட்டுக்கு வந்தவுடன் ரமேஷின் அம்மா கதவை திறந்துள்ளார்.
அப்போது மில்டன் அசோக்குமாரும் அவரது நண்பர்களும் தாக்க முயற்சி செய்துள்ளனர் .
ரமேஷின் உறவினர்கள் தடுத்தும் அதையும் மீறி தாக்கியுள்ளனர்.
இதில் ரமேஷுக்கு மார்பு பகுதிக்கு கீழ் கீறல் தலையில் காயம் மற்றும் விரல்களில் வெட்டு காயம் ஏற்பட்டது இதனை தடுக்க வந்த சீனியாபுரத்தை சேர்ந்த
1.சுரேஷ்குமார் வயது 50 த/பெ வேல்மயில் தலையில் வெட்டுகாயம் இடது தோள்பட்டைக்கு கீழ் வெட்டுகாயம்
2.சுதாகர் வயது 42 த/பெ ஜெயராஜ் தலையின் நடுப்பகுதியில் வெட்டுகாயம்
என்று அடித்து காயப்படுத்தியுள்ளனர்.
மேலும் ரமேஷை அடித்து காயப்படுத்தியது மற்றுமின்றி கொலைமிரட்டலும் விடுத்துள்ளனர்.
அதன்பின் ரமேஷின் வீட்டிற்கு முன் நிறுத்தபட்டிருந்த ரூபன் என்பவருக்கு சொந்தமான TN84 F 0304 இருசக்கர வாகனத்தையும் அடித்து சேதப்படுத்தினர்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் ரமேஷ் மற்றும் அவரது உறவினர்களை மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
ரமேஷ் மருத்துவ மணையில் சிகிச்சை பெற்ற பிறகு ஶ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் மனு கொடுத்தார்.
இந்த மனுவை பெற்றுக்கொண்ட நகர் ஆய்வாளர் பாஸ்கர் அவர்கள் குழுவானது சார்பு ஆய்வாளர் திரு பாபு சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு தங்கவேல் அடங்கிய குழுவிடம் விசாரணைக்கு உத்தரவிட்டார்.
மனுவை பெற்றுக்கொண்ட 5 மணிநேரத்திற்குள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்கியவர்களில் 5 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில் அந்த 8 பேரும் நாங்கள்தான் தாக்கினோம் என்பதை ஒப்புக்கொண்டனர்.
அதன்படி அவர்கள் பிடிபட்ட 5 பேர் மீது குற்றபத்திரிக்கை பதியபட்டு கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உடபடுத்தினர்.
குற்றம் நடந்த 5 மணி நேரத்திற்குள் குற்வாளிகளை கைது செய்த சார்பு ஆய்வாளர் பாபு மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளர் தங்கவேல் இருவரையும் நகர் காவல் துனை கண்காணிப்பாளர் திரு நமசிவாயம் அவர்களும் ஆய்வாளர் திரு பாஸ்கர் அவர்களும் வெகுவாக பாராட்டினர்.
எப்படிதான் குற்றங்கள் நடந்தாலும் ரெளவுடிகளின் எண்ணிக்கையை குறைப்பதில் காவல்துறையின் துரித நடவடிக்கையின் பங்கு இன்றியமையாதது என சொல்லாமல் சொல்லியவிதம் மன நிம்மதியளிக்கிறது.
