மதுரையில் தனியார் விடுதியில் கேரளாவை சேர்ந்த வாலிபர் தற்கொலை, திடீர் நகர் போலீசார் விசாரணை
மதுரை மாநகர், திடீர் நகர் C1, காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான பெருமாள் தெப்பம் அருகில் உள்ள தனியார் விடுதியில் கடந்த 2 ம் தேதி கேரளா, திருவனந்தபுரத்தை சேர்ந்த ஷாஜஹான் மகன் பெரோஸ்கான் வயது 43/21, என்பவர் தன் சொந்த அலுவல் விசயமாக அறை எடுத்து தனியாக தங்கியிருந்தார். மறுநாள் 3 ம் தேதி அந்த லாட்ஜில் ரூம் பாயாக பணிபுரியும் அருப்புகோட்டையை சேர்ந்த சுப்பிரமணி மகன் மூர்த்தி வயது 40/21, என்பவர் காபி கொடுப்பதற்காக அறையின் கதவை தட்டியுள்ளார், ஆனால் அறையின் உள்ளிருந்து எந்த பதிலும் வராத காரணத்தால் ஜன்னலை திறந்து உள்ளே பார்த்த போது அந்த அறையில் தங்கியிருந்த பெரோஸ்கான் தனக்குதானே மின் விசிறியில் தூக்கு மாட்டிக்கொண்டு இறந்த நிலையில் தொங்கிக்கொண்டிருந்தார் இதனை கண்ட ரூம்பாய் மூர்த்தி உடனே திடீர் நகர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்து அவரது இறப்பு பற்றி சட்டப்படி விசாரணை நடத்தும்படி புகார் அளித்தார், புகாரை பெற்றுக்கொண்ட காவல் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு.சோணை அவர்கள் வழக்கு பதிவு செய்து இறந்தவர் பற்றியும் அவரது இறப்புப்பற்றியும் விசாரணை நடத்தி வருகிறார்.
