32 வது தேசிய சாலை பாதுகாப்பு மாத நிகழ்ச்சிகள் துவக்க விழாவை ஆரம்பித்து வைத்த காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சியர் அவர்கள்
32 வது தேசிய சாலை பாதுகாப்பு நிகழ்ச்சி கடந்த 18/01/21 முதல் 17/02/21 முடிய ஒரு மாத காலம்நடக்க இருக்கும் இந்த வேளையில் தினசரி சாலை விழிப்புணர்வு நிகழ்வுகள் நடந்த வண்ணம் உள்ளது இதில் காவலர்களோடு இணைந்து மாணவ, மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள், சமூக ஆர்வளர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி வருகிறார்கள்.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியை மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. பிரேம் ஆனந்த் சின்ஹா அவர்கள் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. அன்பழகன் IAS ஆகிய இருவரும் மதுரை தமுக்கம் சந்திப்பில் கடந்த 18 ம் தேதி காலை 11 மணிக்கு கொடியசைத்து துவக்கி வைத்தனர் காவல் ஆணையர், மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் இருவரும் சாலையில், சாலை விதிகளை மதித்து தலைகவசம் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு இனிப்புகள் வழங்கியும், சாலை பாதுகாப்பு குறித்த துண்டுபிரசுரங்களை வழங்கியும், வாகனங்களின் முகப்புகளில் கருப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியும், வாகன ஓட்டிகளுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
