விருதுநகர் மாவட்டம் :-
திருவில்லிபுத்தூரில் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் முகாம் நடந்தது.
விருதுநகர் மாவட்டத்தில் 18 வயதுக்கு குறைவான குற்றங்கள் சம்பந்தமாக குழந்தை தொழிலாளர்களை வைத்து பிச்சை எடுப்பதை தடுக்கவும் காணாமல் போன குழந்தைகளை கண்டுடிபிடித்து பெற்றோர்களிடம் ஒப்படைக்கும் சிறப்பு நடவடிக்கையாக “புன்னகையை தேடி”
Operations smile -2021
கடந்த 1ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு பெருமாள் அவர்களால் தொடங்கப்பட்டு செயல்படுத்த பட்டு வருகிறது.
இதில் மனித வர்த்தகம் ஆள்கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள், தொழிலாளர் நலத்துறை ஆகியவை இணைந்து செயல்படுகிறது.
இந்த குழுவினர் திருவில்லிபுத்தூர் பகுதிகளில் குழந்தைகள் பிச்சை எடுக்கிறார்களா என்பதை பேருந்து நிலையம் , கோவில்கள் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் சோதனை செய்தார்கள்.
மேலும் குழந்தைகளை கடை, அலுவலகம் போன்ற இடங்களில் பணியமர்த்த பட்டு இருக்கிறார்களா என்பதை ஆய்வு செய்தார்கள்.
இந்த நிகழ்ச்சி நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு கருத்தபாண்டி மற்றும் சிறப்பு சார்பு ஆய்வாளரான மாணிக்கம் முன்னிலையில் நடந்தது.
