மதுரை, பெரியார் நிலையம் அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது, திடீர் நகர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை மாநகர் திடீர் நகர் C1, சட்டம் ஒழுங்கு காவல் நிலைய காவல் ஆய்வாளர் திருமதி.கீதாலெக்ஷிமி அவர்களின் உத்தரவின்படி சிறப்பு சார்பு ஆய்வாளர் திரு. வீரமணி அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக கடந்த 1 ம் தேதி ரோந்துப் பணியில், சக காவலர்களுடன் ஈடுபட்டிருந்தார் அந்த சமயம் பகல் சுமார் 12.30 மணியளவில் மதுரை பெரியார் நிலையம் அருகே தினத்தந்தி பாலத்திற்கு அடியில் கையில் பிளாஸ்டிக் பையுடன் சந்தேகப்படும்படியாக ஒரு நபர் நின்று கொண்டிருந்தார் அவர் போலீசாரை பார்த்தவுடன் ஓட முயன்றார், உடனே ரோந்து பணியில் இருந்த காவலர்கள் அவர்களை மடக்கி பிடித்து விசாரித்தனர், அவர் மதுரை, மேலவாசலை சேர்ந்த கனேசன் மகன் வேல்முருகன் வயது 39/21, என தெரியவந்தது, அவரை சோதனை போட்ட போது, அவர் மனித உயிருக்கு கேடு விளைவிக்கும் மதிமயக்கும் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது. அதை அவர் மதுரை அனுப்பானடி அருகே ரிங்ரோட்டில் இனம் தெரியாத நபரிடம் மொத்தமாக வாங்கி வந்து அதை சில்லரையாக விற்பனை செய்து வந்த குற்றத்தை ஒப்புக்கொண்டதின் அடிப்படையில் அவரை கைது செய்து காவல் நிலையம் அழைத்து வந்து வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர், நீதி மன்ற உத்தரவின்படி அவரை சிறையில் அடைத்தனர்.