மதுரை, வெள்ளைச்சாமி நாடார் கல்லூரியில் விழிப்புணர்வு கருத்தரங்கில் அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்களின் விழிப்புணர்வு பிரச்சாரம்
மதுரை நாகமலைபுதுக்கோட்டை, வெள்ளச்சாமி நாடார் கல்லூரியில் மாணவ, மாணவிகள் பேராசிரியர்கள், உள்ளிட்டோருக்கு ஏற்படும் பிரச்சனைகள் தொடர்பாக புகார் அளிக்க புதிய புகார் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதற்கான தொடக்க விழா கல்லூரி வளாகத்தில் உள்ள தனசேகரபாண்டியனார் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மதுரை, அண்ணாநகர் காவல் உதவி ஆணையர் திருமதி. லில்லிகிரேசி அவர்கள் கலந்து கொண்டார்கள், இவர் மாணவ, மாணவியர்களுக்கு அறிவுரை வழங்கினார், அப்போது அவர் பேசுகையில் மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கிறது என்றார்.
கல்லூரிக்கு செல்லும் பெண்கள் சட்டத்திருத்தங்கள், தண்டனைகளை அறிந்து கொள்ளவேண்டும். அனைத்து சட்டங்களையும் அறிந்து கொள்ளாவிட்டாலும் தங்களுக்கு உதவும் ஒரு சில சட்டங்களையாவது தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும் என்றார், மேலும் அவர் கூறுகையில், சமூகவலைதளங்களை சரியான முறையில் பயன்படுத்த வேண்டும் , சமூக வலைதளங்களில் வரும் அனைத்து கருத்துக்களையும் பகிரக்கூடாது. அதனால் பாதிப்பு ஏற்படும் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும் சமூகவலைதளங்களில் சட்டத்திருத்தங்களை கற்றுக்கொள்ளவேண்டும், சமூக வலைதளங்களில் நாம் ஒரு கருத்தை பதிவிடுகிறோம் என்றால் அதனை நன்கு ஆராய்ந்து அதன்பின்னர்தான் அதை பதிவிட வேண்டும் என்றார். மேலும் காவல்துறை சார்பில் அறிமுகப்படுத்தியுள்ள காவலன் செயலியை அனைவரும் தங்களது செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும் ஏதேனும் ஆபத்து ஏற்படும் போது அதனை சரியான முறையில் பயன்படுத்தினால் அந்த தகவல் போலீசாருக்கு சென்று விடும், அதனை தொடர்ந்து, 10 நிமிடத்தில் நீங்கள் இருக்கும்இடத்திற்கு போலீசார் வந்து விடுவார்கள். எனவே அந்த செயலியை மாணவ, மாணவிகள் தங்களின் பாதுகாப்பிற்காக பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிசெய்யவே காவல்துறை இருக்கிறது. காவல்துறைக்கு நீங்களும் உங்களால் முடிந்த அளவு ஒத்துழைப்பு கொடுத்தால் உங்களுக்கு முழுமையான பாதுகாப்பை அளிக்கமுடியும் என்றார்.