மதுரையில் ஆபரேஷன் ஸ்மையில் ஸ்ட்ராட்,
சாலையில் சுற்றித் திரிந்த 3 குழந்தைகள் மீட்பு
காவல்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு அலகு ஆகியவற்றின் சார்பில் ஆபரேஷன் ஸ்மையில் என்ற தலைப்பில் சாலையில் கேட்பாரின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணி கடந்த 1 ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் கோவில்கள், ரயில் நிலையம் பஸ் நிலையம் உள்ளிட்ட இடங்களில் இந்த குழுவினர் ஆய்வு செய்து கேட்பாரின்றி சுற்றித் திரியும் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபடுகின்றனர். இந்நிலையில் கடந்த 6 தேதி உசிலம்பட்டி, திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மாவட்ட கூடுதல் துணை ஆணையர் திருமதி. வனிதா அவர்கள், வருவாய் கோட்டாச்சியர் ராஜ்குமார் அவர்கள் தலைமையில் குழுவினர் குழந்தைகளை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். இதில் துணை போலீஸ் சூப்ரண்டுகள் வினோதினி, ராஜன், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் கனேசன் குழந்தைகள் நல குழு உறுப்பினர்கள் பாண்டியராஜன், சண்முகம், சாந்தி, பேர்ட்ஸ் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் அறிவழகன், போலீசார், தொழிலாளர் நலத்துறை அதிகாரிகள், குழந்தைகள் பாதுகாப்பு அலகு பணியாளர்கள் மற்றும் சைல்ட் லைன் பணியாளர்கள் கலந்து கொண்டனர். கடந்த 6 ம் தேதி ஒரே நாளில் சாலையில் சுற்றி திரிந்த 3 குழந்தைகள் மீட்கப்பட்டு மாவட்ட குழந்தைகள் நல குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. இந்த குழந்தைகள் பாதுகாப்பு நலன் கருதி தற்போது அந்த 3 குழந்தைகளும் காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
