கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்றவர்கள் சென்னையில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
தரமணி பகுதியில் கோயில் உண்டியலை உடைத்து பணத்தை திருட முயன்ற ஹேமச்சந்திரன் (எ) அப்பு உட்பட 3 குற்றவாளிகள் J-13 தரமணி காவல் குழுவினரால் கைது (08.02.2021).
Trio nabbed by J-13 Taramani police team for attempting to steal money from temple hundial (08.02.2021)
சென்னை, தரமணி, பகுதியில் உள்ள வீரசக்தி விநாயகர் கோயிலிலிருந்து 06.02.2021 அன்று கோயில் உண்டியலை உடைத்து திருட முயன்ற 3 நபர்கள், பொதுமக்களை பார்த்ததும் அங்கிருந்து தப்பியோடினர். இது குறித்து மேற்படி கோயிலின் அர்ச்சகர் சரவணபவன் J-13 தரமணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் , J-13 தரமணி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்து கண்காணிப்பு கேமராவின் உதவியுடன் கோயிலின் உண்டியலை உடைத்து திருட முயன்ற 1.ஹேமச்சந்திரன் (எ) அப்பு, வ/20, , தரமணி 2.கோகுல் (எ) எறா, வ/20, தரமணி 3.பவித்ரன், வ/19, தரமணி ஆகிய 3 குற்றவாளிகளை கைது செய்து நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
On the complaint of Saravana Bhavan M/71, (Temple Administrator) stating that 3 unknown persons tried to steal money from the hundial of Veera Sakthi Vinayagar temple at Taramani, a case was registered by Inspector of Police, J-13 Taramani. During investigation, with the help of CCTV footage 1.Hemachandran @ Appu M/20,Taramani, 2.Gokul @ Era M/20, Taramani, 3.Pavithran M/19, Taramani were identified as accused and arrested them. Legal action was taken against them.
