மதுரை மாநகரத்தில் ஒரே நாளில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்
மதுரை நகரில் 14 காவல் ஆய்வாளர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்கள், அதன்படி ஆய்வாளர் மணிகண்டன் மத்திய குற்றப்பிரிவு, செல்வி நில அபகரிப்பு தடுப்பு பிரிவு, எஸ்தர் குற்றப்பதிவேடு, குமரன் கன்ட்ரோல் ரூம், முகமதுஇத்ரீஸ் மற்றும் பெத்துராஜ் தீவிர குற்றத் தடுப்பு பிரிவு, வசந்தா, குற்றப்பிரிவு மீனாட்சியம்மன் கோவில் காவல் நிலையம். சரவணகுமார் உயர்நீதி மன்றம் சட்டம் ஒழுங்கு, பிரியா உயர் நீதி மன்றம் குற்றப்பிரிவு, காந்திமதி திருநகர்,சீனிவாசன் விளக்குத் தூண் சட்டம் ஒழுங்கு, ராதிகா தெற்கு வாசல் குற்றப்பிரிவு, சேதுமணிமாதவன் ஜெய்ஹிந்துபுரம் சட்டம் ஒழுங்கு, கோட்டைச்சாமி அவணியாபுரம் என மாற்றப்பட்டுள்ளது.