மதுரை மாவட்டம் தனியாமங்கலம் பகுதியில் அனுமதியின்றி சட்ட விரோதமாக மது விற்பனை, கீழவளவு போலீசாரின் அதிரடி நடவடிக்கை
மதுரை, கீழவளவு காவல்நிலைய சரகத்திற்குட்பட்ட பகுதியான தனியாமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் சுப்பையா மகன் ஜெகதீசன் வயது 43,, இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள பெட்டிக்கடையில் சட்டத்திற்கு புறம்பாக மது விற்பனையில் ஈடுபட்டிருந்தார் அது சமயம் அங்கு ரோந்து வந்த கீழவளவு போலீசாரைப் பார்த்ததும் தப்பியோட எத்தனித்தனர், உடனே அவனை காவலர்கள் சுற்றிவளைத்து பிடித்தனர் அவன் குற்றத்தை ஒப்புகொண்டதை தொடர்ந்து அவன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
