Police Recruitment

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு

திருவள்ளூர் மாவட்டம், குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை சம்பந்தமாக பிப்ரவரி மாதம் 01 முதல் 15 என்று “புன்னகையை தேடி” (Operation Smile) என்று தமிழக அரசு சார்பாக ஒவ்வொரு வருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருடம் குழந்தை தொழிலாளர் குறித்து விழிப்புணர்வு மற்றும் குழந்தை தொழிலாளர்களை மீட்டு மாவட்ட காப்பகத்தில் ஒப்படைத்தும், குழந்தைகளின் நலனுக்காக குழந்தைகள் காப்பகத்தில் வைத்து பராமரிக்கப்படுவார்கள். இவ்வாறு திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. P. அரவிந்தன் IPS அவர்களின் உத்தரவுபடி, பெண்கள் மற்றும் குழந்தைகள் குற்றத்தடுப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திருமதி. மீனாட்சி அவர்களின் மேற்பார்வையில், காவல் ஆய்வாளர், குழந்தைகள் கடத்தல் தடுப்பு பிரிவு, மாவட்ட தொழிலாளர் நலத்துறை, மாவட்ட சமூக பாதுகாப்பு துறை, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு மற்றும் சைல்டு லைன் ஆகியோருடன் சேர்ந்து திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 1.திருவள்ளூர் 2.ஊத்துக்கோட்டை 3.பெரியபாளையம் 4.திருத்தணி 5.பள்ளிப்பட்டு 6.பொன்னேரி 7.கும்மிடிப்பூண்டி 8.சோழவரம் 9.மீஞ்சூர் ஆகிய பகுதிகளில் குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகளை மீட்டு மேலும் காணாமல் போன சிறுவர், சிறுமிகள் 9 பேரை மீட்டு மற்றும் மாவட்டம் முழுவதும் உள்ள காப்பகங்களை ஆய்வு செய்து 6 இடங்களில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு முறை பற்றிய விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு குழந்தைகளின் பெற்றோர்களுக்கு, தகுந்த அறிவுரைகளை வழங்கி குழந்தைகளின் எதிர்காலம் கருதியும், குழந்தை தொழிலாளர்களாக பணி புரிந்து வந்த 9 குழந்தைகள் மற்றும் காணாமல் போன 9 குழந்தைகள் மீட்டு பெற்றோர்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் முன்னிலையில் ஆஜர்படுத்தி அவர்களுக்கு தகுந்த அறிவுரை வழங்கி அவர்களுடைய பெற்றோர்களிடம் குழந்தைகளை அனுப்பி வைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.