Police Recruitment

தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு

தூத்துகுடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடம் மாற்றம், கலங்கிப்போய் நிற்கும் தூத்துக்குடி மக்கள், பணி மாறுதலை மேலிடம் ரத்து செய்யுமா? பொது மக்கள் எதிர்பார்ப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் பல நெருக்கடியான காலகட்டத்தில் பணியில் அமர்ந்தவர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார். அந்த இக்கட்டான சூழ்நிலையில் திறம்பட பணியாற்றி மக்கள் பாராட்டையும் நம்பிக்கையும் பெற்றவர்.
அவர் பொறுப்பேற்ற நாள் முதல் இன்றுவரை மாவட்ட மக்களுக்காக அயராது பாடுபட்டார் என்பதே உண்மை. தூத்துக்குடி மாவட்டத்தில் சுற்றி நடந்த கஞ்சா
வியாபாரம் கட்டுக்குள் கொண்டு வந்தார். ரவுடிகளின் அட்டகாசங்களை அடக்கி, அதிகமாக குண்டாஸ் போடப்பட்டது. குறிப்பாக இந்த லாக் டவுன் நேரங்களில் அவர் செய்த காரியங்கள் ஏராளம் ஏராளம் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஏழை எளியவர்களுக்கு அரிசி மற்றும் மளிகை தொகுப்புகள் வழங்கினார். எங்கு எவர் அழைத்தாலும் தான் ஒரு உயரதிகாரி என்ற கர்வம் இன்றி, கருணை உள்ளத்தோடு அங்கு சென்று நலத்திட்ட உதவிகள் வழங்கி ஏழை எளியோரிடமும். தூத்துக்குடி மக்களிடமும் ஒரு மிகப்பெரிய அன்பை சம்பாதித்தார் என்பது மறுக்கவே முடியாது. ஒரு விபத்து நடந்த இடத்தில் முதல் நபராக இருந்து அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து வந்தார். எந்த அரசியல் நபருக்கும் குடை பிடிக்க விரும்பாத ஒரு கொடைவள்ளல் என்றே அவரை சொல்லலாம். பள்ளி மாணவ, மாணவிகளிடையே நல்ல கருத்துக்களை பரிமாறி அனைத்து பள்ளிகளுக்கும் நேரில் சென்று அறிவுரைகள் கூறி, கலந்துரையாடல் நடத்தி மாணவ, மாணவர்களிடையே நன்மதிப்பை பெற்றார்.
அதுமட்டுமல்ல காவல்துறையில் சிறப்பாக பணியாற்றும் மற்ற காவலர்களுக்கு இவர் வெகுமதியும் சான்றிதழும் வழங்கி பாராட்டுக்களை கோபுரமாக குவித்துக் கொண்டே இருந்தார். இவர் வழங்கும் வெகுமதி பாராட்டுக்களை பெற வேண்டும் என்பதற்காகவே ஒரு காவல் நிலையத்தில் உள்ள ஆய்வாளராக இருந்தாலும் சரி உதவி ஆய்வாளராக இருந்தாலும் சரி மற்ற காவல்துறை நண்பர்கள் யாராக இருந்தாலும் சரி நாமும் பணியில் எஸ்பி போல் பணி செய்ய வேண்டும், சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்திக் கொடுக்க இவரால் மட்டுமே முடிந்தது.
காவல்துறையில் பணியாற்றும் அனைவருமே இவரைப் போல் செயல்பட இவரைப் பாராட்டி இவர் பின்தொடர்ந்து மக்களுக்காக பணி செய்தனர் . ஒரு சாதாரண நபர் வணக்கம் செலுத்தினால் அவருக்கு திருப்பி வணக்கம் செலுத்தும் எளிமையான அதிகாரி இவர்.
மக்களிடையே நல்லுறவை ஏற்படுத்த காவல்துறை பொதுமக்கள் நல்லுறவு என்ற ஒரு கலந்துரையாடலை தூத்துக்குடி மக்களிடையே ஏற்படுத்திக் கொடுத்தார் .
தூத்துக்குடி மக்களின் நீண்டகாலமாக கிடப்பில் போடப்பட்ட மனுக்கள் அனைத்தையும் முகாம் நடத்தி விசாரணையை உடனடியாக முடித்து வைக்க ஏற்பாடு செய்தார். திருட்டுப்போன நகை பொருட்கள் அனைத்தையும் உடனடியாக கிடைக்க தனிப்படை அமைத்து திறம்பட செயல்பட்டார். அப்படி மீட்கப்பட்ட பொருட்கள் அனைத்தும் உரியவர்களிடம் ஒப்படைத்து மக்களிடையே மிகுந்த மரியாதையையும் அன்பையும் சம்பாதித்தார்.
ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 250 முதல் 300 கிலோமீட்டர் தூரம் வரை மக்கள் பணிக்காக இரவும், பகலும் சுற்றி பம்பரமாக பணியாற்றி வந்தார்.
சாத்தான்குளம் சம்பவத்திற்கு அப்புறம் போலீஸ் மத்தியில் இருந்த நல்லுறவு இல்லாமல் போனது அந்த சமயத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியில் அமர்ந்து மீண்டும் காவல்துறையுடன் பொதுமக்கள் நல்லுறவை ஏற்படுத்த ஏதுவாக பாடுபட்ட மக்கள் நண்பன் எஸ்பி. ஜெயக்குமார்.
இப்பொழுது தேர்தலை காரணம் காட்டி சென்னைக்கு மாற்றப்பட்டுள்ளார் என்பது தூத்துக்குடி மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவரது மாறுதல் தூத்துக்குடி மக்களுக்கு துளி அளவும் விருப்பம் இல்லை என்பதே உண்மை. எந்த ஒரு அரசியல் அமைப்புக்கும் துணை போகாமல் சட்டம் ஒழுங்கு மக்கள் பாதுகாப்பு என்று இருந்த கரை படியாத கரத்துக்கு சொந்தக்காரராக தூத்துக்குடி மக்களிடையே வலம் வந்தவர், மக்களின் நண்பர் காவல் கண்காணிப்பாளர்
எஸ்.ஜெயக்குமார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் காவல்துறையில் உயரதிகாரி ஒருவர் மாற்றுதலுக்கு பொதுமக்கள் கனத்த வருத்தத்தை தெரிவிப்பது இவருக்கு என்பது தான் உண்மை. மேலிடம் இவரது பணி மாறுதலை ரத்து செய்து மீண்டும் தூத்துக்குடி மாவட்டத்தின் காவலராக பணி செய்ய வேண்டும் என பொதுமக்கள் அனேகருடைய எதிர் பார்ப்பாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.