விருதுநகர் மாவட்டம்:-
ஶ்ரீவில்லிபுத்தூரில் சட்டத்திற்கு புறம்பாக வெடிபொருள் பதுக்கி வைத்த நபர் கைது செய்யப்பட்டார்.
வடக்கு ஶ்ரீவில்லிபுத்தூரில் கிராம நிர்வாக அலுவலராக P. ராஜகுரு த/பெ பாலகிருஷ்ணன் பணிபுரிந்து வருகிறார்.
ஶ்ரீவில்லிபுத்தூர் வருவாய் வட்டாச்சியார் அவர்களுக்கு ரகசிய தகவல் கிடைத்தது இதில் ஶ்ரீவில்லிபுத்தூரில் N.சண்முகசுந்தரா புரம் ஜெயராம் பயர்ஒர்க்ஸ் ல் சட்டத்திற்கு புறம்பான முறையில் இரவுநேரத்தில் வெடி உற்பத்தி செய்கிறார்கள் எனவும்.
இதனை சோதனை செய்ய வேண்டும் என்று வருவாய் வட்டாச்சியார் அவர்கள் கிராம நிர்வாக அதிகாரியான திரு. ராஜகுரு அவகளிடம் உத்தரவிட்டார்.
அதனடிப்படையில்கிராம நிர்வாக அலுவலர் மற்றும் நகர் காவல்துறையின் துணையுடன் சம்பந்தப்பட்ட இடத்திற்கு விரைந்தனர்.
N.சண்முகசுந்தரா புரத்தில் வடிவேல் என்பவருக்கு சொந்தமான ஜெயராம் பயர்ஒர்க்ஸ் ஒரு அறையில்இரவு நேரத்தில் 9 பேர் வேலை பார்த்து கொண்டு இருந்தனர்.
மற்றெரு அறையில் 100குரோஸ் கருந்திரி, அணுகுன்டு, சரவெடி ,4கேஷ் பெட்டியை கண்டுபிடித்தனர்.
பின்பு உடனடியாக அந்த அறைக்கு சீல் வைத்தனர்.
இரவு நேரத்தில் சட்டத்திற்கு புறம்பாக வேலையில் ஈடுபடுத்திய ஜெயராம் பயர்ஒர்க்ஸ் கணக்காபிள்ளை ராமச்சந்திரன் மற்றும் உரிமையாளர் வடிவேல் இருவரையும் நகர் காவல் சார்பு ஆய்வாளர் திரு பாபு அவர்கள் சம்மந்தப்பட்ட வர்களை கைது செய்தார்.
மேலும் இருவர் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.